Latest

மியன்மார் கள்ளக்குடியேறிகளை ஏற்றிய முதியவருக்கு 11 மாத சிறை, RM30,000 அபராதம்

கோத்தா பாரு, அக்டோபர்-7,

மியன்மார் நாட்டைச் சேர்ந்த 5 கள்ளக்குடியேறிகளை கொண்டுச் சென்ற குற்றத்திற்காக, கிளந்தான், கோத்தா பாருவில் ஒரு முதியவருக்கு 11 மாதங்கள் சிறைத் தண்டனையும் RM30,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

e-hailing ஓட்டுநரான 63 வயது எம்.என். விஜேந்திரன் கடந்தாண்டு நவம்பரில் கிளந்தான் எல்லையில் கள்ளக்குடியேறிகளை கொண்டு சென்றபோது அதிகாலை 2 மணிக்கு பிடிபட்டார்.

அக்குற்றத்திற்கு அதிகபட்சம் 5 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 250,000 ரிங்கிட் அபராதமும் விதிக்க சட்டத்தில் இடமுண்டு.

எனினும் அவரின் வயது மற்றும் உடல்நிலையை கருத்தில் கொண்டு நீதிபதி அத்தண்டனையை விதித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!