
கோலாலம்பூர், அக் 9 –
சிங்கப்பூருக்குள் போதைப் பொருள் கடத்திய குற்றத்திற்காக தூக்கிலிடப்பட்ட மலேசியரான 38 வயதுடைய பி. பன்னீர் செல்வம் என்ற போல் சிலாஸின் இறுதிச் சடங்கு நாளை வெள்ளிக்கிழமை அக்டோபர் 10ஆம் தேதியன்று நடைபெறும்.
காலை 10 மணிக்கு மேல் எண் 1&3 Lorong Raya off Jalan
Risha Raya, Taman Risah , ஈப்போவிலுள்ள Vision Home Perak தேவாலயத்தில் அடக்கச் சடங்கு வழிபாடு நடைபெறும். அதன் பின் அவரது நல்லுடல் பத்து காஜா, ஜாலான் பாப்பானில் உள்ள கிறிஸ்துவ கல்லறைக்கு கொண்டுச் செல்லப்பட்டு அங்கு நல்லடக்கம் செய்யப்படும்.
51.84 கிரேம் போதைப் பொருள் கடத்தியதாக 2017 ஆம் ஆண்டு சிங்கப்பூர் உயர் நீதிமன்றம் பன்னீர் செல்வத்திற்கு மரண தண்டனை விதித்தது.
அதற்கு எதிராக அவர் செய்துகொண்ட மேல் முறையீடு மற்றும் பொது மன்னிப்பு கோரிக்கை நிராகரிக்கப்பட்டதை தொடர்ந்து புதன்கிழமை காலையில் அவருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.
ஏற்கனவே செப்டம்பர் 25ஆம்தேதி போதைப் பொருள் குற்றத்திற்காக கே.தட்சிணாமூர்த்தி தூக்கிலிடப்பட்ட இரண்டு வாரத்திற்குப் பின் தூக்கிலிடப்பட்ட இரண்டாவது மலேசியர் பன்னீர் செல்வம் ஆவார்