
பெட்டாலிங் ஜெயா, அக்டோபர் 9 –
நாட்டில் Influenza தொற்று அதிகரித்து வருவதால்,கல்வி அமைச்சு (KPM), பள்ளிகளில் மாணவர்கள் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்க வேண்டுமென்று பெற்றோர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
கல்வி அமைச்சு மீண்டும் சுகாதார SOP நடைமுறைகளை பின்பற்றி, மாணவர்கள் முகக்கவசம் அணிதல், கைகளை சுத்தம் செய்தல், நோய்க்குறி கொண்டவர்களிடம் இருந்து தூரம் வைப்பது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை வலுப்படுத்த வேண்டும் PAGE தலைவர் நூர் அசிமா ரஹிம் (Noor Azimah Rahim) கூறினார்.
இதையடுத்து முன்னெச்சரிக்கையே சிறந்தது என்றும் கல்வி அமைச்சு மாணவர்களுக்கு இலவசமாக முகக்கவசம் வழங்க வேண்டும் என்றும் Magpie தலைவர் மக் சீ கின் (Mak Chee Kin) தெரிவித்தார்.
முகக்கவசம் அணிவது மற்றும் கூட்டம் மிகுந்த இடங்களைத் தவிர்ப்பது தொற்றை குறைப்பதற்கான சிறந்த வழி என்று கூறிய மலேசிய தேசிய பல்கலைக்கழகத்தின் (UKM) பொது சுகாதார நிபுணர் டாக்டர் ஷரீபா எஸ்சாத் வான் புத்தே (Dr Sharifa Ezat Wan Puteh), Influenza சிலருக்கு சாதாரணமாக குணமாகினாலும், சிறுவர்கள், வயோதியர்கள், கர்ப்பிணிகள் மற்றும் நோயாளிகளுக்கு இது ஆபத்தாக மாறும் அபாயம் உள்ளதாக குறிப்பிட்டார்.
நேற்று, MRSM மெர்பொக் மற்றும் குவாந்தான் வளாகங்களில் 130-க்கும் மேற்பட்ட மாணவர்கள் Influenza தொற்றால் பாதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது