
அம்பாங், அக்டோபர்-13,
சிலாங்கூர் மாநில அரசு, இனி நிலம், சொத்து அல்லது கட்டட உரிமம் பெற விரும்பும் அனைவருக்கும் மலாய் மொழியில் பேசும் ஆற்றல் கட்டாயமாக்கப்படுவதாக அறிவித்துள்ளது.
மலாய் மொழியைப் பேசவும், வழக்கில் பயன்படுத்தவும் தெரிந்திருக்க வேண்டுமென்பது தேசிய அடையாளம் மட்டுமல்ல… உள்ளூர் கலாச்சாரத்தைப் பாதுகாக்கும் முக்கிய அடிப்படையாகும் என மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
இந்த நடவடிக்கை, மலாய் மொழியை வலுப்படுத்தவும், நாட்டின் கலாச்சார மரபை மதிக்கவும் உதவும் என அவர் சொன்னார்.
ஆனால், மந்திரி பெசாரின் இவ்வறிவிப்பு சிலர் மத்தியில் விவாதத்தையும் கிளப்பியுள்ளது; குறிப்பாக மலாய் மொழியில் சரளமாக பேச தெரியாதவர்கள் அல்லது பிற மொழி பின்னணியிலிருந்து வரும் மக்களுக்கான விளைவுகள் குறித்து கேள்விகள் எழுந்துள்ளன.
மாநில அரசு விரைவில் அதற்கான நடைமுறை வழிகாட்டுதல்கள் குறிப்பாக மலாய் மொழி ஆற்றல் எவ்வாறு மதிப்பிடப்படும் என்பதை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதன் பிறகே இதன் தொடர்பில் தெளிவுப் பிறக்கும்.