
கோலாலம்பூர், அக் 13 – மலாக்காவில் உள்ள ஒரு பள்ளியில் 3 ஆம் படிவ மாணவியை கூட்டாக கற்பழித்ததாக கூறப்படும் 5ஆம் படிவ மாணவர்களில் நால்வர் பள்ளியிலிருந்து நீக்கப்பட்டனர்.
இன்று கூடிய பள்ளியின் ஒழுங்கு நடவடிக்கைக் வாரியத்தால் இம்முடிவு எடுக்கப்பட்டதாக கல்வி இயக்குநர் அசாம் அகமட்( Azam Ahmad )தெரிவித்தார்.
சம்பந்தப்பட்ட நான்கு மாணவர்களும் அடுத்த மாதம் SPM தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவித்ததை அடுத்து கல்வி அமைச்சு கடும் விமர்சனத்திற்கு உள்ளானது.
சந்தேக நபர்களுக்கு SPM தேர்வு எழுத அனுமதி வழங்குவது அவர்களின் செயல்களுக்கான தண்டனையிலிருந்து தப்பிக்க முடியாது என்று Azam வெளியிட்ட ஒரு அறிக்கையில் வலியுறுத்தினார்.
இந்த நடவடிக்கையினால் நடைமுறை சட்ட செயல்பாட்டில் தலையிடு இருக்காது என்று அவர் கூறினார்.
சந்தேக நபர்கள் பள்ளியில் SPM தேர்வு எழுத மாட்டார்கள், அதற்கு பதிலாக, அவர்கள் தடுப்பு மையத்திலோ அல்லது வேறு தனி இடத்திலோ எழுதுவார்கள்.
அக்டோபர் 2 ஆம் தேதி பிற்பகல் 2.50 மணியளவில், தான் விட்டுச் சென்ற ஒரு பொருளை எடுப்பதற்காக தனது வகுப்பறைக்குச் சென்று கொண்டிருந்தபோது, பாதிக்கப்பட்ட 15 வயது மாணவிக்கு எதிராக இந்த பாலியல் குற்றம் இழைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
சந்தேக நபர்களில் இருவர் இந்த சம்பவத்தைப் தங்கள் கைதொலைபேசிகளில் பதிவு செய்ததாகக் கூறப்படுகிறது, பின்னர் அந்த காணொளிகள் ஒன்லைனில் பகிரப்பட்டன.
கூட்டாக கற்பழித்த குற்றத்திற்காக தண்டனைச் சட்டத்தின் பிரிவு 375 Bயின் கீழ் விசாரணைகளுக்கு உதவுவதற்காக அந்த நான்கு மாணவர்களும் அக்டோபர் 16 ஆம் தேதி வரை தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.