Latestமலேசியா

மகள் மீண்டும் எழுந்து நடக்க வேண்டி லுக்குட்டில் தந்தை நடத்தும் ‘கருணையே உருவமாகி’ நிதி திரட்டும் நிகழ்ச்சி

 

செனாவாங், அக்டோபர்-14,

“அப்பா, நான் எப்போது மீண்டும் நடப்பேன்?” இந்த கேள்வியே போர்ட்டிக்சனைச் சேர்ந்த இரா. சரவணதீர்த்தாவின் இதயத்தை தினமும் கிழிக்கிறது.

அவரின் மகள் சமேதா கிருஷ்ணா, கடந்த பிப்ரவரி மாதம் நிகழ்ந்த சாலை விபத்தில் இடது இடுப்பு எலும்பு பாதிக்கப்பட்டு, 6 மாதங்களாக நடக்கும் திறனை இழந்துவிட்டார்.

வலது கால் முட்டியும் கடுமையாக சேதமடைந்து கால் பகுதியில் இரத்த ஓட்டம் தேக்கம் அடைந்துள்ளது.

நிலைமையை மோசமாக்கும் வகையில் சமேதாவின் femur neck எலும்பும் பலவீனமடைந்து வருகிறது; அதற்கு உடனடியாக இடுப்பு எலும்பு மாற்று அறுவை சிகிச்சைத் தேவைப்படுகிறது. ஆனால் அதற்கான செலவு அதிகம்.

ஆனால், எப்படியும் நடந்துவிட வேண்டும், படித்து பட்டம் பெற்று, மணமகள் முக ஒப்பனைத் துறையில் சிறந்து விளங்க வேண்டும் என்ற கனவுடன் இருக்கும் மகளை அவர் ஏமாற்ற விரும்பவில்லை.

இதற்காக சரவணதீர்த்தா “கருணையே உருவமாகி” என்ற பெயரில் ஒரு நிதி திரட்டும் கலாச்சார நிகழ்ச்சி நடத்தவுள்ளார்.

வரும் நவம்பர் 8-ஆம் தேதி, போர்டிக்சன், லுக்குட்டில் உள்ள Regent Hall மண்டபத்தில், RM 200 நுழைவு நன்கொடையுடன் அந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுளது.

சமேதாவின் கனவு மீண்டும் நடப்பது மட்டுமல்ல, வாழ்வை மீண்டும் தொடங்குவதே; எனவே பொது மக்களின் கருணையும், கடவுளின் ஆசீர்வாதமும் தன் மகளுக்குத் தேவையென நம்பிக்கைத் தளராத சரவணதீர்த்தா கூறுகிறார்.

நன்கொடை அளிக்க விரும்புவோர் கீழ் காணும்/ திரையில் காணும் எண்களில் அவ்வாறு செய்யலாம்…

💳 CIMB வங்கி: 7027636317 — R. Saravanatheerta
📞 தொடர்புக்கு: 019-5652222

உங்களின் ஒவ்வொரு பங்களிப்பும், சமேதாவின் ஒவ்வோர் அடியாக மாறும்…

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!