
புக்கிட் ஜாலில், அக்டோபர்-17,
2025 சிலாங்கூர் ஜூனியர் சூப்பர் ஸ்டார் இசைப் பயணத்தின் மாபெரும் இறுதிச் சுற்று அண்மையில் கோலாலாம்பூர், புக்கிட் ஜாலில் தேசிய விளையாட்டு வளாகத்தில் பிரமாண்டமாக நடைபெற்றது.
அக்டோபர் 11-ஆம் தேதி புக்கிட் ஜாலில் கார் நிறுத்துமிடத்தில் இறுதிச் சுற்று நடைபெற்றது.
செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் Dr குணராஜ் ஜோர்ஜ் ஏற்பாட்டில் ஐந்தாவது ஆண்டாக நடைபெற்ற இப்போட்டியில் இம்முறை 160-க்கும் மேற்பட்ட சிறார்கள் நேர்முகத் தேர்வில் பங்கேற்றனர்.
அவர்களில், நீதிபதிகளின் மனங்களை வென்ற 10 பேர் இறுதிச் சுற்றுக்குள் நுழைந்தனர்.
சென்னையிலிருந்து வந்திருந்த மூத்தப் பின்னணிப் பாடகர் கலைமாமணி டி.எல். மகராஜன் இறுதிப் போட்டிக்குத் தலைமை நீதிபதியாகப் பணியாற்றினார்.
சிறார்களின் பாடல் திறன், பார்வையாளர்களை பிரமிக்க வைத்தது.
வெற்றியாளர்களுக்கு பிரமுகர்கள் பரிசுகளை எடுத்து வழங்கினர்.