மாணவி குத்திக் கொலை செய்யப்பட்ட துயர சம்பவம்: மன்னிப்பு கோரிய பள்ளி முதல்வர்

கோலாலம்பூர், அக்டோபர் 18 –
அண்மையில் நாட்டை உலுக்கிய படிவம் 4 மாணவி படிவம் 2 மாணவனால் கொலை செய்யப்பட்ட துயர சம்பவம் தொடர்பாக, சம்பந்தப்பட்ட பள்ளியின் தலைமை ஆசிரியர் உணர்ச்சி வசப்பட்டு பெற்றோர்கள் முன்னிலையில் மன்னிப்பு கேட்டார்.
சமூக ஊடகங்களில் பரவிய காணொளியில், பள்ளி நிர்வாகத்துக்கும் பெற்றோர்களுக்கும் இடையிலான சந்திப்பின் போது, இந்தச் சம்பவம் நிகழ்ந்ததற்கு பள்ளி சார்பில் தான் மன்னிப்பு கேட்பதாக குறிப்பிட்டார்.
அவர் மேலும், பள்ளி முழுமையான பொறுப்பையும் ஏற்று, மாணவர்களின் பாதுகாப்பை முன்னிலைப்படுத்தி தேவையான நடவடிக்கைகளை எடுக்கத் தயாராக இருப்பதாக உறுதியளித்தார்.
பெற்றோர்களிடம் ஏதேனும் சரியான ஆலோசனைகள் அல்லது செயல்திட்டங்கள் இருந்தால், அவற்றை பரிசீலித்து நடைமுறைப்படுத்துவோம் என்றும் குறிப்பிட்டார்.
1,197 மாணவர்கள் கொண்ட இந்தப் பள்ளியை நிர்வகிப்பது எளிதல்ல என்றாலும் சவால்களை எதிர்கொண்டு சிறந்ததைக் செய்யப் பாடுபடுவோம் எனவும் தெரிவிக்கப்பட்டது.
ஆரம்ப விசாரணையில், மாணவியின் உடலில் பல குத்துக்காயங்கள் இருந்தது கண்டறியப்பட்டதென்று பெட்டாலிங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ஷம்சுதின் மமட் (Asisten Komisioner Shamsudin Mamat ) கூறினார்.