Latest

இஸ்தான்புல்லில் நடைபெறும் குளோபல் ஜீரோ வேஸ்ட் கருத்தரங்கில் மலேசியாவுக்கு சிறப்பு பாரட்டு விருது

கோலாலம்பூர், அக்டோபர்-18,

மறுசுழற்சி பொருளாதாரம் மற்றும் நிலையான கழிவு மேலாண்மையின் கொள்கைகளை மேம்படுத்துவதில் நாட்டின் உறுதிப்பாட்டை அங்கீகரிக்கும் விதமாக, Zero waste Foundationனின் சிறப்பு பாராட்டு விருதை மலேசியா பெறவிருக்கிறது.

துருக்கியின் இஸ்தான்புல் நகரில் நேற்று தொடங்கி ஞாயிற்றுக்கிழமைவரை நடைபெறும் Global Zero waste Forum 2025 இல் இந்த வாரம் மலேசியா அந்த விருதை பெறவிருப்பதாக வீடமைப்பு ஊராட்சித்துறை அமைச்சு வெளியிட்ட அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.

Zero கழிவு நிகழ்ச்சி நிரலை முன்னெடுப்பதில் அடையப்பட்ட முன்னேற்றத்தைக் காட்டவும், மற்ற நாடுகளின் சிறந்த நடைமுறைகளிலிருந்து கற்றுக்கொள்ளவும் உலக அரங்கில் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்துவதில் தாம் பெருமைப்படுவதாக இந்த கருத்தரங்கிற்கான மலேசிய பேராளர் குழுவுக்கு தலைமையேற்றுள்ள வீடமைப்பு மற்றும் ஊராட்சித்துறை அமைச்சர் ஙா கோர் மிங்
( Nga Kor Ming) தெரிவித்தார்.

Zero கழிவுகள் செயல்பாட்டில்: மக்கள், இடங்கள், முன்னேற்றம்” என்ற கருப்பொருளில் நடைபெறும் இந்த கருத்தரங்கில் 104 நாடுகளின் பங்கேற்பாளர்கள் மற்றும் 118 அனைத்துலக அமைப்புகளின் பிரதிநிதிகள் முன்னிலையில், தொடக்க விழாவில் Nga Kor Ming முக்கிய உரையை நிகழ்த்தவிருக்கிறார்.

மேலும் துருக்கியேவின் சுற்றுச்சூழல், நகரமயமாக்கல் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சர் முராத் குரும் (Murat Kurum ) மற்றும் ஐ.நா வாழ்விட நிர்வாக இயக்குநர் அனக்லாவ்டியா ரோசர்பாக் (Anaclaudia Roserbach) ஆகியோருடன் Nga Kor Ming இருதரப்பு சந்திப்புகளையும் நடத்துவார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!