Latestமலேசியா

நவம்பர் 1ஆம்தேதி முதல் ஜே.பி.ஜே சம்மன்களுக்கு 50 விழுக்காடு கழிவு

சுங்கைப் பட்டாணி , அக்டோபர்- 27,

சம்மன்களை செலுத்துவதற்கு சாலைப் பயனர்களுக்கு நவம்பர் 1 ஆம்தேதி முதல் டிசம்பர் 30 ஆம்தேதிவரை 50 விழுக்காடு கழிவுடன் சாலை போக்குவரத்துத்துறையான ஜே.பி.ஜே இரண்டு மாதங்கள் அவகாசம் வழங்கும் என அதன் தலைமை இயக்குநர் ஏடி பாட்லி ரம்லி ( Aedy Fadly Ramli) தெரிவித்துள்ளார். இந்த கட்டணக் கழிவு அனைத்து வகையான சம்மன்களுக்கும் பொருந்தும் . நிலுவையில் உள்ள சம்மன்களை வைத்திருக்கும் பொதுமக்கள் JPJ முகப்பிடங்களில் அல்லது வழங்கப்பட்ட கட்டண வழிமுறை மூலம் அபராதம் செலுத்துவதன் மூலம் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

இவ்வாண்டு நவம்பர் 1ஆம்தேதி தொடங்கி டிசம்பர் இறுதிவரை
இரண்டு மாத காலத்திற்குள் வழங்கப்பட்ட 50 விழுக்காடு கட்டண கழிவை பயன்படுத்தி பொதுமக்கள் தங்கள் சம்மன்களைத் தீர்த்துக் கொள்ள இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளும்படி Aedy Fadly வலியுறுத்தினார். நீதிமன்றத்தில் தீர்வு காண வேண்டிய சம்மன்கள் தவிர இதர அனைத்து வகையான சம்மன்களுக்கும் இந்த சிறப்பு கட்டண கழிவை பயன்படுத்திக் கொண்டு பொதுமக்கள் அபராதத்தை செலுத்தலாம்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!