
கோலாலம்பூர், அக்டோபர்- 27,
கைதான் 48 மணி நேரத்திற்குள் சட்டவிரோதமாக பாராங் கத்தி வைத்திருந்த குற்றத்திற்காக பாதுகாவலர் ஒருவருக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ஒரு பிரம்படியும் விதிக்கப்பட்டது. 32 வயதுடைய அகமட் ஜஸ்லான் முகமட் அரிப் செசன்ஸ் நீதிமன்ற நீதிபதி மசுலியான்னா அப்துல் ரஷிட் முன்னிலையில் குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து இந்த தண்டனை விதிக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட தினமான நேற்றிலிருந்து இந்த தண்டனையை அனுபவிக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டது.
பிரிக்பீல்ட்ஸிலுள்ள அடுக்ககத்தின் நுழைவாயிலில் விடியற்காலை மணி 5.30 அளவில் அகமட் ஜஸ்லான் இக்குற்றத்தில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டான் . பொது இடத்தில் சட்டத்திற்கு விரோதமாக இக்குற்றத்தில் ஈடுபட்டதாக ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் சட்டத்தின் 6 ஆவது ( 1) விதியின் கீழ் அகமட் ஜஸ்லான் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.



