Latestமலேசியா

மனைவி மற்றும் பிள்ளையை காத்தியால் தாக்கிய ஆடவன் கைது

சிபு, அக் 30 –

தனது மனைவி மற்றும் மகளை கத்தியால் தாக்கியதாக நம்பப்படும் ஆடவனை போலீசார் கைது செய்தனர்.

கடுமையான காயத்திற்குள்ளான அந்த இருவரையும் சிபு , பெர்மாய் ஜெயாவில் உள்ள அவர்களது வீட்டில் கைவிட்ட பின்னர் அங்கிருந்து வெளியேறிய 57 வயது சந்தேக நபர் நேற்று மாலை 4.15 மணிக்கு கனோவிட் பகுதியில் சிறப்பு பணிக்குழுவால் தடுத்து வைக்கப்பட்டதாக சிபு போலீஸ் தலைவர் துணை கமிஷனர் சுல்கிப்லி சுஹைலி ( Zulkipli Suhaili ) தெரிவித்தார்.

விசாரணைக்கு உதவுவதற்காக சந்தேக நபரை தடுத்து வைக்கும் உத்தரவு சிபு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் பெறப்படும்.

குற்றவியல் சட்டத்தின் 326 ஆவது பிரிவின் கீழ் இந்த விவகாரம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதோடு அவர்கள் தாக்கப்பட்டதற்கான நோக்கத்தை கண்டறிவதற்கான நடவடிக்கையும் தீவிரப்படுத்தப்பட்டு வருவதாக Zulkipli Suhaili வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டார்.

நேற்று காலை ஏழு மணியளவில் நடைபெற்ற தகராறில் ஒரு தாய் மற்றும் மகள் பலத்த காயத்திற்கு உள்ளானது குறித்து போலீசிற்கு தகவல் கிடைத்தது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!