Latest

நாட்டில் 5,149 மின்சார வாகன சார்ஜிங் நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன – MITI

கோலாலம்பூர், அக்டோபர் 31 –

நாடு முழுவதும் 5,149 மின்சார வாகன (EV) பொதுச் சார்ஜிங் நிலையங்கள் செப்டம்பர் 30 வரை நிறுவப்பட்டுள்ளதாக மூலதனம், வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சு(MITI) தெரிவித்துள்ளது.

இதில் 1,709 யூனிட்கள் நேர்மின் (Arus Terus pengecas) வகையிலும், 3,440 யூனிட்கள் மாறுமின் (Arus ulang-alik) வகையிலும் உள்ளன. தற்போதைய விகிதம் ஒரு சார்ஜருக்கு எட்டு BEV வாகனங்கள் என MITI தெரிவித்தது. இது சுமார் 42,000 பதிவு செய்யப்பட்ட வாகனங்களின் பயன்பாட்டைச் சமாளிக்க போதுமானதாக இருக்கும்.

மொத்த இலக்கு எட்டப்படவில்லை என்றாலும், DC சார்ஜர்கள் 114 சதவீதம் நிறைவேற்றம் அடைந்துள்ளதால், 1,500 யூனிட் இலக்கத்தை காட்டிலும் உயர்வடைந்துள்ளது.

பேட்டரி மின்சார வாகனங்களுக்கான (BEV) சாலை வரி விலக்கு 2025 டிசம்பர் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதென்றும், 2026 ஜனவரி 1 முதல் புதிய வரி அமலுக்கு வரவுள்ளதென்றும் அறியப்படுகின்றது.

அரசாங்கம், மின்சார மற்றும் ஆற்றல் திறமையான வாகனங்களை ஊக்குவிப்பதிலும், உள்ளூர் EV உற்பத்தி மற்றும் பேட்டரி கூறுகள் மேம்பாட்டிலும் கவனம் செலுத்தி வருவதாக MITI தெரிவித்தது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!