
பெட்டாலிங் ஜெயா, நவம்பர்-3,
PN எனப்படும் பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணி மத்திய அரசாங்கத்தின் அதிகார மையமான புத்ராஜெயாவுக்குத் திரும்பத் தயாராகி வருகிறது.
முன்பை விட மிகவும் வலுவுடன் இருப்பதால் 16-ஆவது பொதுத் தேர்தலில் தாங்கள் ஆட்சியைப் பிடிப்பது சாத்தியமே என, அதன் தலைவர் தான் ஸ்ரீ முஹிடின் யாசின் கூறினார்.
பெரிக்காத்தான் தற்போது அனைத்து இனங்களையும் பிரிதிநிதிக்கிறது; பல்லின மக்களும் அக்கூட்டணியின் உறுப்புக் கட்சிகளில் இணைய ஆர்வம் காட்டுவதாக அவர் கூறிக் கொண்டார்.
மக்கள் ஆதரவு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், புத்ராஜெயாவைக் கைப்பற்றும் கனவை நெருங்குவதாக, பெர்சாத்து கட்சித் தலைவருமான அவர் சொன்னார்.
பெரிக்காத்தான் உறுப்புக் கட்சியான MIPP எனப்படும் மலேசிய இந்திய மக்கள் கட்சியின் தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பில் பங்கேற்ற பிறகு, அந்த முன்னாள் பிரதமர் அவ்வாறு சொன்னார்.
பெட்டாலிங் ஜெயா, தோட்ட மாளிகையில் நடைபெற்ற அந்நிகழ்வில், MIPP தலைவர் பி.புனிதன், பெர்சாத்து, பாஸ், கெராக்கான், பெஜுவாங் போன்ற கட்சித் தலைவைர்களுடன், ஆயிரக்கணக்கான பொது மக்களும் கலந்துகொண்டனர்.



