Latestமலேசியா

ஶ்ரீ கெம்பாங்கான் பெண்ணின் கொலை வழக்கு; நான்காவது சந்தேக நபர் கைது

செர்டாங், நவம்பர் 4 –

ஶ்ரீ கெம்பாங்கானில் நிர்வாண நிலையில் கண்டெடுக்கப்பட்ட பெண் விற்பனையாளர் கொலை வழக்கில், போலீசார் நான்காவது சந்தேக நபரைக் கடந்த ஞாயிற்றுக்கிழமை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 30 வயது மதிக்கத்தக்கவர் என்றும் அவர் இறந்தவரின் வீட்டுத் தோழி ஆவார் என்றும் குறிப்பிடத்தக்கது.

இதுவரை கைது செய்யப்பட்ட நான்கு சந்தேக நபர்களில் பாதிக்கப்பட்ட பெண்ணின் முன்னாள் காதலரும் உள்ளடங்குவார் என்று செர்டாங் மாவட்ட போலீஸ் தலைவர் முகமட் பாரிட் அகமட் தெரிவித்தார்.

போலீசார் மேலும் சில நபர்களைத் தேடி வருகின்ற நிலையில் இதுவரை எட்டு சாட்சிகளிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் மூன்று சந்தேக நபர்களின் தடுப்பு காவலை நீட்டிப்பதற்கு மனுத் தாக்கலும் செய்யப்பட்டுள்ளது.

உயிரிழந்த அப்பெண்ணின் உடல் அக்டோபர் 29 ஆம் தேதியன்று ஶ்ரீ கெம்பாங்கனிலுள்ள ஜலான் அங்கேரிக் (Jalan Anggerik, Seri Kembangan) பகுதியில் துர்நாற்றம் வீசுவதைத் தொடர்ந்து பொதுமக்களால் கண்டெடுக்கப்பட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!