
பேங்கோக், நவம்பர்-9, தாய்லாந்தில், அரசாங்கம் நிர்ணயித்த நேரத்திற்கு வெளியே மது அருந்துவது இனி சட்டவிரோதமாகும்.
விதிமீறினால் 10,000 Baht அதாவது 1,200 ரிங்கிட்டை அபராதமாக செலுத்த வேண்டியிருக்கும்.
அல்லது 6 மாத சிறைவாசம் அனுபவிக்க வேண்டி வரும்.
மதுபான விற்பனைக்கு அனுமதிக்கப்பட்ட நேரங்கள் – காலை 11 மணி முதல் பிற்பகல் 2 மணி வரையிலும் பின்னர் மாலை 5 மணி முதல் இரவு 12 மணி வரையாகும்.
இந்த நேரங்களுக்கு வெளியே, உணவகங்கள், கடைகள், அல்லது மதுபான Bar-களில் கூட மது விற்பனை செய்ய முடியாது.
பொது மக்களோடு, சுற்றுப்பயணிகளுக்கும் இது பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சமூக ஒழுக்கம் மற்றும் பொது பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் இந்தக் கட்டுப்பாடுகளை தாய்லாந்து அரசாங்கம் கடுமையாக அமுல்படுத்த முனைந்துள்ளது.



