
ஷா அலாம், நவம்பர் 13 – கிள்ளான் பகுதியில் உள்ள பெட்ரோல் நிலையம் ஒன்றில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
சம்பவ இடத்தில் இருந்த பொதுமக்கள் அக்காட்சிகளைப் பதிவு செய்து வலைத்தளங்களில் பதிவேற்றியுள்ளனர்.
தப்பிச் செல்ல முயன்றதாக நம்பப்படும் சந்தேக நபரின் வாகனத்தை, அங்கு இருந்த சிலர் தடுக்க முயன்றதையும் காணொளியில் காண முடிகிறது.
மேலும் வெள்ளை நிற காரை ஓட்டி வந்த சந்தேக நபர், சம்பவத்துக்குப் பிறகு தப்பி சென்றதும், அந்த இடத்தில் ஆடவர் ஒருவர் காயமடைந்து அமர்ந்தபடி இருப்பதும் வீடியோவில் பதிவாகியிருக்கிறது.
இந்நிலையில், தெற்கு மாவட்ட போலீஸ் தலைவர் ரம்லி காசாவைத் தொடர்பு கொண்டபோது, சம்பவம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிக்கை விரைவில் வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளார்.



