Latestமலேசியா

இவானா ஸ்மிட் வழக்கு: அரசு செலுத்த வேண்டிய RM1.1 மில்லியன் தொகையை தற்காலிகமாக நிறுத்த நீதிமன்றம் அனுமதி

புத்ராஜெயா, நவம்பர் 18 – புத்ராஜெயாவில், கடந்த 2017 ஆம் ஆண்டு மரணமடைந்த நெதர்லாந்து மாடல் இவானா ஸ்மித்தின் குடும்பத்திற்கு அரசு வழங்க வேண்டிய 1.1 மில்லியன் ரிங்கிட் நஷ்ட ஈட்டை தற்காலிகமாக நிறுத்துவதற்கு, இன்று மேல் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

இந்த வழக்கில் சிறப்பு காரணங்கள் இருப்பதால், நஷ்டஈடு செலுத்துவதைத் தற்போது நிறுத்துவது சரியானது என்று நீதிபதி குழு ஒருமனதாகத் தீர்மானித்தது. இதனால், உயர் நீதிமன்றம் முன்பு உத்தரவிட்ட 1.1 மில்லியன் ரிங்கிட் தொகையைத் தற்போது செலுத்தாமல், அரசு செய்துள்ள மேல்முறையீட்டின் முடிவு வரும் வரை காத்திருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது.

முன்னதாக, கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் அரசின் மேல்முறையீட்டை நிராகரித்தது. பின்பு, இவானாவின் தாய், அரசு 48 மணி நேரத்தில் 1.1 மில்லியன் ரிங்கிட்டைச் செலுத்த வேண்டும் என்று அறிவித்தார். அதனால், அரசு மேல் நீதிமன்றத்தில் ‘தற்காலிக நிறுத்தம்’ கேட்டு விண்ணப்பித்ததைத் தொடர்ந்து, இன்று அந்த விண்ணப்பம் ஏற்கப்பட்டது.

இவானா ஸ்மிட் மரண வழக்கில், அவரது தாயார், மலேசிய அரசு, தலைமை போலீஸ், ஒரு விசாரணை அதிகாரி மற்றும் உள்துறை அமைச்சகத்திற்கு எதிராக அலட்சியம், சரியான விசாரணை செய்யாதது போன்ற குற்றச்சாட்டுகளில் சிவில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்திருந்தார்.

கடந்த ஜூலை 29 ஆம் தேதியன்று, உயர் நீதிமன்றம் இவானாவின் தாயாருக்கு 1.1 மில்லியன் ரிங்கிட் நஷ்டஈடு மற்றும் 100,000 ரிங்கிட் வழக்குக்கட்டணம் வழங்க அரசுக்கு உத்தரவிட்டது. ஆனால், தற்போது மேல் நீதிமன்றத்தின் stay order காரணமாக அந்த தொகை மேல்முறையீடு முடிவு வரும் வரை செலுத்தப்படாது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!