
தங்காக், டிசம்பர்-20 – ஜோகூர், தங்காக்கில் தந்தை பின்னால் reverse எடுத்த கார் மோதி, 2 வயது பெண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.
Parit Bunga, Taman Kesang Baru-வில் உள்ள வீட்டில் நேற்று முன்தினம் காலை 8 மணிக்கு அத்துயரச் சம்பவம் நிகழ்ந்தது.
அதில் தலையில் படுகாயமடைந்த அக்குழந்தை, மூவார் சுல்தானா ஃபாத்திமா நிபுணத்துவ மருத்துவமனையில் 12 மணி நேரங்களாக உயிருக்குப் போராடி, அன்றிரவு மரணமுற்றது.
30 வயது தந்தை காரை பின்னால் எடுக்கும் போது அக்குழந்தை திடீரென காரின் பின்னால் ஓடியதாகக் கூறப்படுகிறது.
எதையோ மோதியது போல் உணர்ந்த அவ்வாடவர் காரை நிறுத்தி விட்டு, பின்னால் போய் பார்த்த போது மகள் இரத்த வெள்ளத்தில் கிடந்தது கண்டு அதிர்ந்து போனதாக, போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.



