Latestமலேசியா

கார் ஆற்றில் விழுந்தது சீட் பெல்ட்டுடன் ஓட்டுனர் இருக்கையில் இறந்து கிடந்தார்

அலோஸ்டார், டிச 22 – அலோர் ஸ்டார், Persiaran Taman Jeragan னில்
Sungai Ampang Jajar ரில் புரோடுவா Axia கார் ஆற்றில் விழுந்ததில் பாதுகாப்பு பட்டை அணிந்திருந்த நிலையில் அக்கார் ஓட்டுநர் இறந்து கிடந்தது கண்டுப்பிடிக்கப்பட்டார்.

ஆற்றின் அடியில் மூழ்கிக் கிடந்த அக்கார் மீட்கப்பட்டதை தொடர்ந்து அதன் ஓட்டுநர் இருந்கையில் இறந்த ஆடவர் Taman Anggerik கைச் சேர்ந்த 28 வயதுடைய OOi Cheah Jhun என அடையாளம் காணப்பட்டது.

VRS 2,000 என்ற சிறப்பு சாதனத்தை பயன்படுத்தி ஆற்றின் அடியில் சிக்கிக்கிடந்த இக்காரை மிதக்கவைத்து தீயணைப்பு படையினர் அதனை மீட்டனர்.

ஆற்றின் அடியில் ஏழு மீட்டர் ஆழத்தில் இருந்த அக்காரை இன்று மதியம் 2.35 அளவில் முக்குளிப்பு வீரர்கள் கண்டுப்பிடித்தனர்.

அந்த ஆற்றின் இரும்பு தடுப்பை மோதியபிறகு 49 மீட்டர் உயரத்திலிருந்து அக்கார் வேகமாக ஆற்றில் விழுந்ததாக கூறப்பட்டது. நீரிலிருந்து வெளியே காணப்பட்ட அக்கார் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக ஆற்றில் மூழ்கியதாக இச்சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறினர்.

மதியம் மணி 2.39 அளவில் அக்காரின் ஓட்டுநர் காரிலிருந்து ஆற்றின் கரையோரத்திற்கு கொண்டுவரப்பட்டபோதிலும் அவர் இறந்துவிட்டதை சுகாதார அமைச்சின் மருத்துவ அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!