
கிள்ளான், ஜனவரி-18-கிள்ளானில் சாலை நடுவே நிகழ்ந்த சண்டை வைரலாகி, போலீஸ் அதனை விசாரித்து வருகிறது.
Dash cam கேமராவில் பதிவான காட்சியில், Jalan Keretapi சாலையில் 2 மோட்டார் சைக்கிளோட்டிகள் மாறி மாறி குத்திக் கொள்கின்றனர்.
இதனால் மற்ற வாகனமோட்டிகள் அதிர்ச்சியடைந்ததோடு போக்குவரத்தும் நிலைக்குத்தியது.
அந்த இருவரில் ஒருவர் புகாரளித்துள்ளதை, வட கிள்ளான் போலீஸ் தலைவர் துணை ஆணையர் எஸ். விஜயராவ் உறுதிப்படுத்தினார்.
சண்டைக்கான காரணம் குறித்து இதுவரை எதுவும் தெரிவில்லை; விசாரணைத் தொடருவதாக அவர் சொன்னார்.



