Latest
மலேசியாவில் கஞ்சா பறிமுதல்; பெண்ணுக்கு எதிரான வேட்டையில் தாய்லாந்தும் ஒத்துழைப்பு

சுங்கை கோலோக், ஜனவரி-21-மலேசிய எல்லையில் அண்மையில் 1.82 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில்,‘லூனா’ என அழைக்கப்படும் 30 வயது பெண் சந்தேக நபர் தாய்லாந்துக்கு தப்பிச் சென்றதாக நம்பப்படுகிறது.
இரட்டை குடியுரிமை கொண்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் லூனாவை இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை.
இதையடுத்து, தாய்லாந்து போலீஸார், மலேசிய அதிகாரிகளிடம் முக்கிய தகவல்களை கோரியுள்ளனர்.
கூடுதல் தகவல்கள் பெறப்பட்டால் விசாரணை வேகமாகும் என அவர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில் இரு நாடுகளின் எல்லைப் பகுதிகளில் தேடுதல் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
முன்னதாக குவாலா கிராயில் நடத்தப்பட்ட 2 திடீர் சோதனைகளில், 3 உள்ளூர் ஆடவர்கள், 52 கிலோ போதைப்பொருளுடன் போலீஸிடம் சிக்கினர்.
அக்கும்பலின் மூளையாக செயல்பட்டவர் தான் இந்த லூனா ஆவார்.



