
சிங்கப்பூர், பிப் 6- துவாஸ் சோதனைச் சாவடியில் உள்ள குடிநுழைவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணைய அதிகாரிகள், 6,000த்திற்கும் மேற்பட்ட மெல்லும் புகையிலை பொட்டலங்களை சிங்கப்பூர் குடியரசுக்குள் கடத்த முயன்றதை முறியடித்தனர்.
ஜனவரி 28 ஆம்தேதி மலேசியாவில் பதிவு செய்யப்பட் ஒரு காரை மேலும் சோதனைக்கு அனுப்பிய பின்னர் அந்த புகையிலை பொட்டலங்களை அவர்கள் பறிமுதல் செய்தனர்.
அந்த காரின் பல்வேறு பகுதிகளில் இந்த புகையிலை பொட்டலங்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக குடிநுழைவுத் துறையின் முகநூலில் தெரிவிக்கப்பட்டது.
இந்த கடத்தல் விவகாரம் தொடர்பில் மலேசியாவைச் சேர்ந்த 36 வயது ஓட்டுநர் கைது செய்யப்பட்டார். மேல் விசாரணைக்காக இந்த விவகாரம் சுகாதார அறிவியல் வாரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.



