
இத்தாலியில் வீட்டில் இறந்துகிடந்த எஜமானர்; கடித்துத் தின்ற 3 pit bull வளர்ப்பு நாய்கள்
குவால்டோ தாடினோ, பிப்ரவரி-20,
இத்தாலியில் வீட்டில் மயங்கி விழுந்து மரணமடைந்த எஜமானரை, அவர் ஆசையாய் வளர்த்து வந்த 3 _pit bull_ நாய்களே கடித்துத் தின்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
52 வயது Salvatore Allegrucci, பிப்ரவரி 15-ஆம் தேதி தான் தங்கியிருந்த அடுக்குமாடி வீட்டில் பிணமாக மீட்கப்பட்டார்.
சுமார் 4 நாட்களாகத் தொடர்புகொண்டும் பதில் வராததை அடுத்து, உறவினர்கள் புகார் தகவல் தெரிவிக்கவே, போலீஸாரும் தீயணைப்புக் குழுவினரும் சம்பவ இடம் விரைந்தனர்.
வீட்டுக்கு வெளியேயே பெரும் துர்நாற்றம் வீசிய நிலையில், கதவை உடைத்து உள்ளே சென்று, Salvatore-ரின் உடலை மீட்டனர்.
பாதி உடல் கடித்துத் தின்றது போல் இருந்ததால் அதிகாரிகள் அதிர்ச்சியைய, ஓர் அறையில் 3 _pit bull_ நாய்கள் கட்டப்பட்டிருந்தன; அருகில் குடிக்க நீரோ, தீனாயோ இல்லை. அதிகாரிகளை கண்டதும் நாய்கள் பெரும் பயந்த சுபாவத்தோடும் காணப்பட்டன.
இதையடுத்து அந்நாய்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
Salvatore-ரின் மரணத்திற்கான உண்மைக் காரணத்தைக் கண்டறிய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



