Latestமலேசியா

குர்ஆன் மிதிக்கப்பட்டது ஏற்றுக்கொள்ள முடியாதது – ராயர் கண்டனம்

கோலாலம்பூர், பிப்ரவரி-26-இஸ்லாமியர்களின் புனித நூலான அல்-குர்ஆனை மிதித்து சர்ச்சையில் சிக்கியுள்ள பல்கலைக்கழக மாணவரின் செயல் மிகத் “தவறானதும் ஏற்றுக்கொள்ள முடியாததும்” என, ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் RSN ராயர் கண்டித்துள்ளார்.

மலேசியாவின் பல்லின சமூகத்தில் அனைத்து மதங்களும் மதிக்கப்பட வேண்டும் என்றும், மதத்தை கேலி செய்பவர்கள் சட்டத்தின் முழு கடுமையையும் எதிர்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

மாணவரை போலீஸிடம் ஒப்படைத்த தந்தையின் நடவடிக்கையையும் ராயர் பாராட்டி, அது சட்டத்தின் மாண்பை நிலைநாட்டும் சிறந்த உதாரணம் எனக் கூறினார்.

முன்னதாக, பஹாங் அல்-சுல்தான் அப்துல்லா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அம்மாணவர் குர்ஆனை மிதித்த புகைப்படம் வைரலானது.

பின்னர் கைதுச் செய்யப்பட்டு பிப்ரவரி 28 வரை விசாரணைக்காக தடுத்து செய்யப்பட்டுள்ளார்.

மத உணர்வுகளை புண்படுத்துதல், நிந்தனை, மற்றும் இணைய வசதிகளை தவறாக பயன்படுத்துதல் ஆகிய சட்டங்களின் கீழ் விசாரணை நடைபெறுகிறது.

தனது மகனின் பாதுகாப்புக்குக் கருதி தந்தையே போலீஸில் புகார் அளித்து, முஸ்லீம்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!