Latestஉலகம்

“நான் தவறேதும் செய்யவில்லை”; எப்ஸ்டெய்ன் ஆவணங்கள் குறித்து கிளிண்டன் விளக்கம்

வாஷிங்டன், பிப்ரவரி-28-அமெரிக்கப் பாலியல் குற்றவாளி Jeffrey Epstein தொடர்பில் புதிதாக வெளியாகியுள்ள ‘எப்ஸ்டெய்ன் ஆவணங்களில்’ தமது பெயரும் தொடர்புப்படுத்தப்பட்டுள்ள நிலையில், தம் மீதான குற்றச்சாட்டுகளை அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளிண்டன் மறுத்துள்ளார்.

“நான் எதையும் பார்க்கவில்லை, எதையும் தவறாக செய்யவில்லை” என அவர் தெளிவுப்படுத்தினார்.

எப்ஸ்டெய்னின் குற்றங்கள் வெளிச்சத்துக்கு வருவதற்கு முன், கொஞ்ச காலமே அவனுடன் தமக்கு அறிமுகம் இருந்ததாகவும், எந்த சட்டவிரோத செயல்பாடுகளிலும் தாம் ஈடுபடவில்லை என்றும் கிளிண்டன் கூறினார்.

“எப்ஸ்டெய்னுடனான அந்த அறிமுகத்தில் எப்படி பின்னோக்கிப் பார்த்தாலும், எனக்கு சந்தேகம் எழும்பும்படியான எந்த விஷயமும் தெரியவில்லை” என அவர் காங்கிரஸ் சபையில் அளித்த சாட்சியத்தில் தெரிவித்தார்.

எப்ஸ்டெய்ன் தொடர்பாக அமெரிக்க காங்கிரஸ் சபையில் சாட்சியம் அளித்துள்ள முதல் முன்னாள் அதிபராக கிளிண்டன் திகழ்கிறார்.

எப்ஸ்டெய்ன் உலகளவில் முக்கியப் புள்ளிகளுடன் கொண்டிருந்த நெருக்கமான உறவு குறித்து தொடர்ந்து அதிர்ச்சிகரமான தகவல்கள் அம்பலமாகி வரும் நிலையில், விசாரணை தீவிரமடைந்துள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!