மலேசியா

ஜோகூர் பாருவில் பள்ளிக் கழிவறையில் முதலாமாண்டு மாணவன் மீது தாக்குதல்; தலைமையாசிரியர் கைது

ஜோகூர் பாரு, மார்ச்-15,

ஜோகூர் பாருவில் பள்ளிக் கழிவறையில் முதலாமாண்டு மாணவனைத் தாக்கி காயப்படுத்திய சந்தேகத்தில் தலைமையாசிரியர் கைதாகியுள்ளார்.

48 வயது தலைமை ஆசிரியர், மாணவனின் தந்தை அளித்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்டதாக போலீஸ் கூறியது.

ஏற்பட்ட காயங்களுக்கு, 7 வயது அம்மாணவன் தற்போது சிகிச்சை பெற்று வருகிறான்.

தலைமை ஆசிரியர் 3 நாட்கள் காவலில் வைக்கப்பட்டு, பின்னர் போலீஸ் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

2001 சிறார் சட்டத்தின் கீழ் விசாரணைத் தொடருகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!