
கோலாலம்பூர், ஜூலை-29-கோலாலம்பூரில் உள்ள பிரபல வணிக வளாகமொன்றின் கேளிக்கைப் பூங்காவில் ‘பேய் வீடு’ (Haunted House) விளையாட்டில், 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த 30 வயது ஆடவருக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
வங்காளதேசியான Md Israful Alam என்ற அந்நபர், கடந்த பிப்ரவரி 7-ஆம் தேதி கைதுச் செய்யப்பட்ட தேதியிலிருந்தே இந்த சிறைத்தண்டனையை அனுபவிக்க வேண்டும் என கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றம் உத்தரவிட்டது.
சம்பவத்தன்று, பாதிக்கப்பட்ட சிறுமி, அந்த ‘பேய் வீடு’ விளையாட்டின் போது அந்த நபர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தாயாரிடம் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து அங்குள்ள CCTV கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில் குற்றம் உறுதியானது.
இந்தச் சம்பவத்தால் சிறுமிக்கு கடும் உளவியல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், வெளியே செல்வதற்கே அச்சப்படுவதாகவும் அரசுத் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.
சிறைத்தண்டனையோடு சேர்த்து, அவருக்கு கட்டாய ஆலோசனையும் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2017-ஆம் ஆண்டு சிறுவர் பாலியல் வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் இந்தத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.



