Latestஉலகம்

தென் ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: கடலோரப் பகுதிகளுக்குச் சுனாமி எச்சரிக்கை

 

தோக்யோ, ஜூலை-28 – தென் ஜப்பானின் Kyushu தீவோரக் கடற்பகுதியில் ரிக்டர் அளவில் 7.1 ஆகப் பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து, கடலோரப் பகுதிகளுக்குச் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

10 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, குமாமோட்டோ, நாகாசாகி, ககோஷிமா உள்ளிட்ட 7 மாநிலங்களில் அவசர எச்சரிக்கை அமைப்புகள் இயக்கப்பட்டன.

Ariake வளைகுடா உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் ஒரு மீட்டர் உயரம் வரை சுனாமி அலைகள் எழக்கூடும் என ஜப்பான் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ள நிலையில், கரையோர மக்க உடனடியாக மேடான பகுதிகளுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

பாதுகாப்புப் பரிசோதனைகள் காரணமாக Shinkansen அதிவேக தோட்டா இரயில்கள் உட்படப் பல இரயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.

அதேவேளை, அவ்வட்டாரத்தில் உள்ள Sendai மற்றும் Genka அணுமின் நிலையங்களில் எந்தப் பாதிப்பும் இல்லை எனவும், அவை பாதுகாப்பாக இயங்கி வருவதாகவும் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!