Latestமலேசியா

கிள்ளானில் கேபிள் திருடும் முயற்சி தோல்வி; ஆடவர் கைது

கிள்ளான், மார்ச்-27-கிள்ளான், கம்போங் ராஜா ஊடாவில் இரயில் தண்டவாளத்தில் கேபிள் திருட முயன்ற ஒருவரை போலீஸ் கைதுச் செய்துள்ளது.

நேற்று மாலை 6.45 மணியளவில், சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய அவ்வாடவர், ரோந்துபணியில் இருந்த KTMB உதவி போலீஸாரின் கண்களில் பட்டார்.

அவரை நெருங்கியபோது, அந்நபர் தப்பிச் செல்ல முயன்றார்.

ஆனால், போலீஸார் விரைந்து செயல்பட்டு அவரைக் கைதுச் செய்தனர்.

சோதனையில், கேபிள் வெட்ட பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் பாராங் கத்தி மற்றும் கத்தரிக்கோல் போன்ற கருவிகள் அவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டன.

அவரிடம் அடையாள ஆவணங்கள் எதுவும் இல்லை.

பின்னர், மேல் விசாரணைக்காக அந்நபர் போலீஸிடம் ஒப்படைக்கப்பட்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!