
ஜோகூர் பாரு, ஏப்ரல்-1 – 3R நிந்தனை மற்றும் அவமதிப்பு புகாரில், 2 பெண்கள் உள்ளிட்ட மூவர் ஜோகூர் பாருவில் கைதாகியுள்ளனர்.
‘ratunurputribalqis’ என்ற டிக் டோக் கணக்கில் பதிவேற்றப்பட்ட சர்ச்சைக்குரிய வீடியோ தொடர்பில், ஓர் ஆடவர் செய்த போலீஸ் புகாரின் அடிப்படையில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இஸ்லாம், அரசாங்கத் தலைவர்கள் மற்றும் மலாய் ஆட்சியாளர்களை அவதூறு செய்யும், அவமதிக்கும் வீடியோ அந்த டிக் டோக் கணக்கில் பதிவேற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து 17 முதல் 49 வயதிலான அம்மூவரும் 4 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
தேச நிந்தனைச் சட்டம், தொடர்பு-பல்லூடகச் சட்டம், குற்றவியல் சட்ம் ஆகியவற்றின் கீழ் விசாரணை நடைபெறுவதாக ஜோகூர் போலீஸ் கூறியது.
பொது அமைதியைக் கெடுக்கும் நோக்கில் 3R அம்சங்களை தொட வேண்டாமென பொது மக்களுக்கு மீண்டும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.



