
கோலாலம்பூர், ஏப்-7- செராஸ் கம்போங் 10 ஆவது மைல் பகுதியில் இருந்த மெத்தை தொழிற்சாலையில் நேற்றிரவு ஏற்பட்ட தீவிபத்தில் 80 விழுக்காடு எரிந்து நாசமானது.
இரவு 9.32 மணிக்கு இந்தச் சம்பவம் குறித்து தமது துறைக்கு அழைப்பு வந்ததாக சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையின் நடவடிக்கை பிரிவின் உதவி இயக்குநர் அகமட் முக்லிஸ் கூறினார்.
இதனைத் தொடர்ந்து பண்டார் துன் உசேய்ன் ஓன், பண்டான் ,ஸ்ரீ கெம்பங்கான் மற்றும் காஜாங் ஆகிய தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையங்களைச் சேர்ந்த 29 தீயணைப்பு வீரர்கள் சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு விரைந்து வந்தடைந்தபோது அந்த தொழிற்சாலை 80 விழுக்காடு பகுதி தீயில் பாதிக்கப்பட்டிருந்ததால் உடனடியாக தீயை அணைக்கும் நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டனர்.



