Latestமலேசியா

நாசா வெளியிட்ட அதிசய “Earthset” படம்; அர்டெமிஸ் விண்கலம் பதிவுச் செய்த பூமியின் அபூர்வக் காட்சி

வாஷிங்டன், ஏப்ரல்-8-அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா வெளியிட்டுள்ள புதிய புகைப்படம் உலகம் முழுவதும் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

“Earthset” என அழைக்கப்படும் இந்த அபூர்வக் காட்சி, நிலவின் வரம்புக்குக் கீழே பூமி மறையும் தருணத்தை காட்டுகிறது.

இப்படம், ஆர்டெமிஸ் (Artemis) பயணத்தில் இருந்த விண்வெளி வீரர்களால், நிலவின் மறுபுறம் சுற்றும் போது பதிவுச் செய்யப்பட்டது.

பூமியின் ஒளி மற்றும் இருள் பகுதிகளை ஒரே நேரத்தில் காட்டும் இந்த படம், 1968-ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட புகழ்பெற்ற “Earthrise” படத்துக்கு ஈடாக ஒப்பிடப்படுவதோடு, வலைத்தளவாசிகளால் ஆச்சரியமாகப் பார்க்கப்படுகிறது.

ஏப்ரல் 1-ஆம் தேதி 4 வீரர்களை ஓரியன் விண்கலம் மூலம் ஏற்றிச் சென்ற இந்த ஆர்டெமிஸ் திட்டம், 50 ஆண்டுகளுக்கு பிறகு மனிதர்களை மீண்டும் நிலவுக்கு கொண்டு சென்றுள்ள விண்வெளித் திட்டமாகும்.

1970-களில் அப்பல்லோ 13 விண்கலம் சென்றதை விட அதிக தூரத்திற்கு இவர்கள் சென்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

நிலவில் தரையிறங்காமல், பூமியைச் சுற்றி வந்தே தரவுகளைச் சேகரித்த பிறகு, ஏப்ரல் 10-ஆம் தேதி பசிபிக் பெருங்கடலில் இந்த ஓரியன் விண்கலம் தரையிறங்கும்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!