Latestமலேசியா

இரயிலில் மேக்கப் போடத் தடை? SMRT-யின் புதிய போஸ்டரால் வலைத்தளங்களில் சர்ச்சை

சிங்கப்பூர், ஏப்ரல்-16-காலை நேரத்தில் அவசரமாக அலுவலகம் செல்லும்போது, இரயிலில் மேக்கப் போடுவது தவறா அல்லது தேவையா?…

சிங்கப்பூரின் MRT இரயில்களில் ஒட்டப்பட்டுள்ள ஒரு புதிய போஸ்டர், இப்போது இணையவாசிகளிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

பயணிகள் இரயில்களில் நாகரிகமாக நடந்து கொள்வதை ஊக்குவிக்க SMRT நிறுவனம் ஒரு புதிய விழிப்புணர்வு பிரசாரத்தைத் தொடங்கியுள்ளது.

இதில் இரயிலின் நடுப்பகுதிக்கு நகர்ந்து செல்வது மற்றும் தரையில் உட்காராமல் இருப்பது போன்ற அறிவுறுத்தல்களுடன், “பொது இடத்தில் மேக்கப் போடுவதைத் தவிர்க்கவும்” என்ற புதிய கோரிக்கையும் இடம்பெற்றுள்ளது.

​சுமார் 25 பயணிகளிடம் நடத்தப்பட்ட ஆய்வில், பெரும்பாலானோர் இரயிலில் மேக்கப் போடுவது பெரிய தவறு இல்லை என்றும், மற்றவர்களுக்குத் தொந்தரவு தராத வகையில் அதைச் செய்யலாம் என்றும் கூறியுள்ளனர்.

​இருப்பினும், ஒரு சில செயல்கள் அநாகரிகமானவை என்று பயணிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

குறிப்பாக, இரயிலில் அமர்ந்து நகங்களை வெட்டுவது பலரையும் அதிருப்தி அடையச் செய்துள்ளது.

“நகத் துண்டுகள் சிதறுவதும், சுகாதாரமற்ற முறையில் நடந்து கொள்வதும் அருவருப்பாக உள்ளது” என பயணிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இரயில் பெண்கள் மேக்கப் போடுவது ஓரளவுக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டாலும், நகம் வெட்டுவது போன்ற செயல்களுக்குப் பொது மக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!