Latestமலேசியா

“எனக்குச் செய்வினை வைக்கப்பட்டுள்ளது”: சக போலீஸ்காரரைச் சுட்ட இன்ஸ்பெக்டர் நீதிமன்றத்தில் வினோத வாக்குமூலம்

கோலாலாம்பூர், ஏப்ரல்-16-சக போலீஸ் அதிகாரி ஒருவரைக் கொலை செய்ய முயன்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட இன்ஸ்பெக்டர் ஒருவர், தான் ‘செய்வினை’ அல்லது ‘பில்லி சூனியத்தால்’ பாதிக்கப்பட்டிருப்பதாக நீதிமன்றத்தில் தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த வாரம், 27 வயது Roslan Salleh எனும் போக்குவரத்து போலீஸ்காரரை பெரோடுவா அக்சியா காரில் பின்னாலிருந்து மோதி கொல்ல முயன்றதாக 40 வயது இன்ஸ்பெக்டர் Muhammad Kamal Raj Shanmugam Abdullah மீது கோலாலாம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றம் சுமத்தப்பட்டது.

அதனை மறுத்த அவ்வாடவர், மனநல பாதிப்பால் நடந்த சம்பவத்தை தம்மால் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள முடியவில்லை என்றும் சொன்னார்.

தான் நீண்ட காலமாகப் பில்லி சூனியத்தால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், அந்தப் பாதிப்பினால் ஏற்பட்ட மன உளைச்சலே இத்தகைய செயலுக்குக் காரணம் என்றும் தெரிவித்தார்.

தனது கட்சிக்காரர் 3 ஆண்டுகளாக schizophrenia எனும் ஒருவகை மனநோயால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், அண்மையக் காலமாக சரியாக சிகிச்சைக்கு செல்லாமலும் மருந்து உட்கொள்ளாததாலும், தற்போது அவர் ஒரு நிலையில் இல்லையென வழக்கறிஞர் G. நந்தகோபாலன் தெரிவித்தார்.

இதையடுத்து, Kamal Raj-ஜை உலு கிந்தா மனநல மருத்துவமனையில் 30 நாட்களுக்கு மனநலப் பரிசோதனை செய்ய நீதிபதி உத்தரவிட்டார்.

சிவப்பு சட்டை மற்றும் சுவாசக் கசவம் அணிந்திருந்த Kamal முன்னதாக முழு போலீஸ் பாதுகாப்புடன் நீதிமன்றம் அழைத்து வரப்பட்டார்.

வழக்கு வரும் ஜூன் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!