
நீலாய், ஏப் 23 – மந்தின் தாமான் பெர்மாய் ஜெயாவில் கடந்த வெள்ளிக்கிழமை முகமூடி அணிந்த இரண்டு நபர்கள் ஒரு வீட்டில் புகுந்து ஐந்து நிமிடங்களில் பல்வேறு விலையூர்ந்த பொருட்களைத் திருடிச் சென்றனர்.
மதியம் சுமார் 1.56 மணியளவில் வீட்டிற்குத் திரும்பிய 40 வயது மதிக்கத்தக்க உள்ளூர் பெண் ஒருவர் தனது வீட்டில் சூறையாடப்பட்ட சம்பவத்தைக் கண்டு அதிர்ச்சிக்கு உள்ளானதாக நீலாய் மாவட்ட போலீஸ் தலைவர் Superintendan ஜொஹாரி யஹ்யா ( Johari Yahya) தெரிவித்தார்.
சந்தேக நபர்கள் நகைகள், முக்கிய ஆவணங்கள் மற்றும் பணம் உள்ளிட்ட
120,000 ரிங்கிட் மதிப்புள்ள பொருட்களைத் திருடியுள்ளனர்.
இந்த கொள்ளையின்போது ஹோண்டா சிட்டி வாகனம் பயன்படுத்தப்பட்டுள்ளது அவ்வீட்டின் ரகசிய கண்காணிப்பு கேமராவில் பாதிவாகியுள்ளது.
அந்த வாகனத்தில் பதிவு எண் போலியானது என்பதோடு , கெடாவில் சுங்கை பட்டாணியில் இருக்கும் ஒரு நிறுவனத்தின் பெயரில் பதிவு செய்யப்பட்டிருப்பதும் கண்டறியப்பட்டதாக ஜொஹாரி யஹ்யா கூறினார்.



