Latestமலேசியா

பெர்சாத்துவில் மலாய்க்காரர் அல்லாதவர்களின் பங்கு வெறும் அடையாளமல்ல – ஸ்ரீ சஞ்சீவன் பேச்சு

ஷா ஆலாம், ஏப்ரல்-27-பெர்சாத்து கட்சியில் மலாய்க்காரர் அல்லாதவர்களின் பங்களிப்பு இனி வெறும் அடையாளப்பூர்வமானதல்ல, மாறாக நாட்டின் அரசியல் நீரோட்டத்தை விரிவுபடுத்துவதற்கான தீவிர உறுதிப்பாடாகும்.

பெர்சாத்துவில் மலாய்க்காரர் அல்லாதவர்களுக்கான பெர்செக்குத்து பிரிவின் தலைவரும், பெர்சாத்து உச்ச மன்ற உறுப்பினருமான டத்தோ ஆர். ஸ்ரீ சஞ்சீவன் கூறியுள்ளார்.

சிலாங்கூர் மாநில பெர்சாத்து மாநாட்டில் பேசிய சஞ்சீவன், பெர்செக்குத்துப் பிரதிநிதிகளின் வலுவான பிரவேசம் ஒரு முக்கியமான திருப்புமுனையாகும் எனக் குறிப்பிட்டார்.

மலேசியாவின் மிகவும் வளர்ச்சியடைந்த மாநிலமாக, சிலாங்கூர் ஒரு முதிர்ச்சியடைந்த மற்றும் பன்முக அரசியல் யதார்த்தத்தைப் பிரதிபலிக்கிறது; அங்கு வாக்காளர்கள் கட்சிகளை கொள்கை, நம்பகத்தன்மை மற்றும் நிலைத்தன்மையின் அடிப்படையில் மதிப்பிடுகிறார்கள் என்று அவர் வலியுறுத்தினார்.

மாநிலத்தை மீண்டும் கைப்பற்றும் முயற்சியில், பெர்சாத்து கட்சிக்கும் மலாய்க்காரர் அல்லாத சமூகங்களுக்கும் இடையே நம்பிக்கைப் பாலமாகச் செயல்பட பெர்செக்குத்து தயாராக உள்ளதாகவும் அவர் கூறினார்.

16-ஆவது பொதுத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில், ஒழுங்கமைக்கப்பட்ட யுக்திகளுடன், கட்சியின் ஆதரவை விரிவுபடுத்துவதற்கும், நாட்டின் திசையைத் தீர்மானிப்பதில் மலாய்க்காரர் அல்லாதவர்களுக்குப் அர்த்தமுள்ள இடம் கிடைப்பதை உறுதிச் செய்வதற்கும் இந்த பெர்செக்குத்துப் பிரிவு ஒரு புதிய சக்தியாக உருவெடுக்கும் என்று சஞ்சீவன் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!