
கோத்தா திங்கி, ஏப் 27 – கோத்தா திங்கி, தாமான் கோத்தா ஜெயாவில் உள்ள ஒரு
உணவகத்தில் மூவரை கொலை செய்தததாக 71வயது ஆடவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.
விவசாயியான லிம் லியான் ( Lim Lian ) மீது மாஜிஸ்திரேட் நுர்கலிடா பர்ஹானா அபு பாக்கார் (Majistret Nurkhalida Farhana Abu Bakar )முன்னிலையில் குற்றஞ்சாட்டப்பட்ட போதிலும் அவரிடம் எந்த வாக்குமூலமும் பதிவு செய்யப்படவில்லை.
ஏப்ரல் 19ஆம் தேதி, மதியம் மணி 1.30 அளவில் , தாமான் கோத்தா ஜெயாவிலுள்ள உணவகத்தில் உள்ளூர் ஆடவர்களான 61 வயதான வோங் போ சூன் ( Wong Poh Soon) , 64 வயதான சென் குவா ஹூவா ( Chen Kwai Hwa,) மற்றும் வியட்னாம் பெண்ணான 37 வயதுடைய டிரான் தி டிராங் ( Tran Thi Trang) ஆகியோரை கொலை செய்ததாக லிம் மீது குற்றம் சாட்டப்பட்டது.
குற்றவாளி என நிருபிக்கப்பட்டால் அதிகப்பட்சம் மரண தண்டனை அல்லது 40 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் தண்டனைச் சட்டத்தின் 302 ஆவது விதியின்கீழ் லிம் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. இந்த குற்றச்சாட்டு மீண்டும் மே 13 ஆம்தேதி மறுவாசிப்பிற்கு செவிமடுக்கப்படும்.



