Latestஅமெரிக்காஉலகம்

கொலை முயற்சி: அதிபர் டோனல்ட் ட்ரம்பைக் கொல்ல முயன்ற நபர் மீது அதிகாரப்பூர்வமாகக் குற்றச்சாட்டு பதிவு

வாஷிங்டன், ஏப்ரல்-28-கடந்த சனிக்கிழமை வாஷிங்டனில் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பு விருந்து நிகழ்ச்சியில் துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் மீது அமெரிக்க மத்திய அதிகாரிகள் முறைப்படி குற்றம் சாட்டியுள்ளனர்.

​கலிஃபோர்னியாவைச் சேர்ந்த 31 வயது Cole Tomas Allen, அமெரிக்க அதிபர் டோனல்ட் ட்ரம்பைக் கொல்ல முயன்றது உள்ளிட்ட 3 முக்கியக் குற்றச்சாட்டுகளின் கீழ் திங்களன்று கூட்டரசு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

​இந்தத் தாக்குதலை நடத்துவதற்காகவே கலிஃபோர்னியாவிலிருந்து Allen திட்டமிட்டு வந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஹோட்டலின் படிக்கட்டுகள் வழியாகப் பாதுகாப்பு வளையத்தைத் தாண்டி, துப்பாக்கிகள் மற்றும் கத்திகளுடன் அவர் விருந்து அரங்கை நோக்கி ஓடியது கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகியுள்ளது.

​தாக்குதலுக்கு 10 நிமிடங்களுக்கு முன்பு, Allen தனது குடும்பத்தினருக்கு ஒரு செய்தியை அனுப்பியுள்ளார்.

அதில் தன்னை ஒரு ‘கூட்டரசு தோழமைக் கொலையாளி’ (Friendly Federal Assassin) என குறிப்பிட்டுள்ளதோடு, தனது அரசியல் எதிர்ப்பையும் வெளிப்படுத்தியுள்ளார்.

​இந்தத் தாக்குதலின் போது அதிபர் ட்ரம்ப் மற்றும் துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் ஆகியோர் உடனடியாகப் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

​குற்றம் நிரூபிக்கப்பட்டால் Allen-னுக்கு ஆயுள் தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது…

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!