Latestமலேசியா

ஜப்பானுக்கு அனுப்பப்பட்ட யானைகள் நலன் விவகாரம்: தூதரக உறவை கருத்தில் கொண்டு கவனமாக கையாளப்படும் – பேராக் EXCO

ஈப்போ, மே-5-மலேசியாவில் இருந்து ஜப்பானுக்கு அனுப்பப்பட்ட 3 யானைகள் தொடர்பான விவகாரம், யானைகளின் நலனும் தூதரக ஒப்பந்தங்களும் கருத்தில் கொண்டு கவனமாக கையாளப்படுகிறது.

பேராக் மாநில வீடமைப்பு மற்றும் ஊராட்சிக் குழுத் தலைவர் Sandrea Ng, யானைகளின் நலனை உறுதிச் செய்ய தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக கூறினார்.

Tara, Amoi மற்றும் Kelat ஆகிய அம்மூன்று யானைகள், பாதுகாப்பு மற்றும் இருநாட்டு ஒத்துழைப்பின் ஒரு பகுதியாக ஜப்பானுக்கு அனுப்பப்பட்டன.

யானைகளை மீண்டும் கொண்டு வருவது உள்ளிட்ட எந்த முடிவும், மலேசியா மற்றும் ஜப்பான் இடையிலான ஒப்பந்தங்களை கருத்தில் கொண்டு எடுக்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

இந்த விவகாரத்தில் தூதரக உறவுகளும் யானை நலனும் முக்கியம் என்றும் அவர் கூறினார்.

இந்த சம்பவம் பொது மக்கள் மத்தியில் கவலை ஏற்படுத்தி, வெளிப்படைத்தன்மை மற்றும் விலங்கு பாதுகாப்பு குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!