Latestமலேசியா

அவதூறு வீடியோ: பணமோசடி புகார்களை மறுத்தார் தொழிலதிபர் ஃபர்ஹாஷ்

கோலாலாம்பூர், மே-6-சமூக வலைத் தளங்களில் பரவி வரும் நிதி மோசடி புகார்களுக்கும் தனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என பிரபல தொழிலதிபர் டத்தோ ஸ்ரீ ஃபர்ஹாஷ் வாஃபா சால்வாடோர் (Dato’ Seri Farhash Wafa Salvador) இன்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

Sofia Rini மற்றும் Albert Tei ஆகியோரின் உரையாடல் அடங்கிய வீடியோவில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் முற்றிலும் ஆதாரமற்றவை மற்றும் உள்நோக்கம் கொண்டவை என அவர் கூறியுள்ளார்.

பில்லியன் கணக்கான ரிங்கிட் பணத்தை துருக்கி மற்றும் ஆப்பிரிக்காவுக்கு சட்டவிரோதமாக மாற்றியதாகக் கூறப்படும் தகவல்களை அவர் வன்மையாக மறுத்துள்ளார்.

இவ்வேளையில், தாம் துருக்கி நாட்டின் குடிமகன் அல்ல என்பதையும், அங்கு தமக்கு வங்கிக் கணக்குகள் எதுவும் இல்லை என்பதையும் ஃபர்ஹாஷ் தெளிவுபடுத்தியுள்ளார்.

மேலும், தாம் தற்போது முழுநேர தொழிலதிபர் மட்டுமே என்றும், அரசியலில் ஈடுபடவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

தவறான தகவல்களைப் பரப்பியவர்கள் மீது குற்றவியல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக் கோரி அவர் போலீஸிலும் புகார் அளித்துள்ளார்.

அத்துடன், அவதூறு பரப்பியவர்களுக்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கத் தமது வழக்கறிஞர்களுக்கும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

பொது மக்கள் உறுதிப்படுத்தப்படாத தகவல்களை நம்ப வேண்டாம் என்றும், அதிகாரிகளின் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் ஃபார்ஹாஷ் கேட்டுக் கொண்டுள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!