
கோலாலம்பூர், மே-14-முன்னாள் மத்திய அமைச்சர்களான டத்தோ ஸ்ரீ ரஃபிஸி ரம்லி மற்றும் நிக் நஸ்மி நிக் அஹ்மாட் இருவரும் இணைந்து, வரும் ஞாயிற்றுக்கிழமை ஒரு “புதிய அரசியல் திசையை” அறிவிக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
தற்போதைய நிர்வாகம் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் குறித்து இந்த அறிவிப்பில் முக்கிய இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த அறிவிப்பு ஒரு புதிய அரசியல் கட்சியின் தொடக்கமா அல்லது தீவிர அரசு சாரா இயக்கமா என தற்போதைக்கு தெளிவாகத் தெரியவில்லை.
கடந்தாண்டு பி.கே.ஆர் தேர்தலில் முறையே துணைத் தலைவர் மற்றும் உதவித் தலைவர் பதவிகளைத் தற்காப்பதில் இருவருமே தோல்வியுற்றனர்.
இதையடுத்து அமைச்சர் பதவிகளை இராஜினாமா செய்தவர்கள், மடானி அரசாங்கத்தின் கொள்கைகளை விமர்சனம் செய்வதிலும் தவறுகளைச் சுட்டிக் காட்டுவதிலும் முக்கியப் பங்காற்றி வருகின்றனர்.
குறிப்பாக ரஃபிசி கடுமையாகக் தாக்கி வருகிறார்.
இவர்களுக்கு ஆதரவாக 8 பி.கே.ஆர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இயங்கி வருவதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இவ்விருவரின் இந்த நகர்வு, மலேசிய அரசியலில் ஒரு புதிய அத்தியாயமாகப் பார்க்கப்படுகிறது.
ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இந்த நேரடி அறிவிப்பு குறித்து அரசியல் வட்டாரங்களில் இப்போதே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
ஒருவேளை அது புதிய அரசியல் கட்சியின் உதயம் தொடர்பாக இருந்தால், அடுத்தப் பொதுத் தேர்தல் நிச்சயம் களைக் கட்டும்…



