
அலோர் ஸ்டார், மே-18-கெடாவில் நிகழ்ந்த ஓர் அதிர்ச்சியூட்டும் சம்பவத்தில் பெண் ஒருவர் கழுத்தில் குத்தப்பட்ட நிலையில், படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தாக்குதல் நடத்திய நபர் அந்நியர் அல்ல, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நன்கு தெரிந்தவர் தான் என்பதை போலீஸ் உறுதிப்படுத்தியுள்ளது.
நேற்றிரவு 9.15 Kepala Batas, Jalan Titi Gajah-வில் உள்ள ஓர் உணவகத்திற்கு வெளியே காரினுள் அமர்ந்திருந்தபோது, 35 வயது அந்த அரசு ஊழியர் தாக்கப்பட்டார்.
கழுத்தில் ஆழமான வெட்டுக் காயத்துடன் இருந்த அந்தப் பெண் சுல்தானா பாஹியா மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டார்.
தீவிர சிகிச்சைக்குப் பிறகு அவரின் உடல்நிலை சீராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
சந்தேக நபரும் பாதிக்கப்பட்ட பெண்ணும் ஒருவருக்குக்கொருவர் தெரிந்தவர்கள் என்பதால், இது தற்செயலாக நடந்த தாக்குதல் அல்ல என்பது உறுதியாகியுள்ளது.
தலைமறைவாக உள்ள சந்தேக நபரைத் தேடும் பணியிலும், இந்தத் தாக்குதலுக்கான பின்னணி காரணம் என்ன என்பதைக் கண்டறியும் பணியிலும் போலீஸார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.



