Latestஅமெரிக்காஉலகம்

ஹந்தா வைரஸ் பரவல் அபாயம் குறைவு – WHO

ஜெனீவா, மே 18 – ஹந்தா வைரஸ் (Hantavirus) பரவல் தொடர்பான உலகளாவிய சுகாதார அபாயம் தற்போது குறைந்த அளவிலேயே இருப்பதாக உலக சுகாதார அமைப்பான WHO தெரிவித்துள்ளது.

ஹந்தா வைரஸ் பரவல் ஏற்பட்டதாக கூறப்படும் MV Hondius சொகுசுக் கப்பல் நெதர்லாந்து துறைமுகத்தை நோக்கி பயணம் செய்து வரும் நிலையில், WHO இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

மேலும் சில பயணிகள் மற்றும் கப்பல் பணியாளர்களுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருந்தாலும், தடுப்பு நடவடிக்கைகள் அமல்படுத்தப்பட்டுள்ளதால் வைரஸ் பரவல் அபாயம் குறையும் என WHO தெரிவித்துள்ளது.

அந்தக் கப்பலில், ஹந்தா வைரஸ் காரணமாக மூன்று பயணிகள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது கப்பலில் 25 பணியாளர்கள் மற்றும் இரண்டு மருத்துவ ஊழியர்கள் உட்பட 27 பேர் உள்ளனர்.

இதனிடையே, ஹந்தா வைரஸிற்கு இதுவரை தடுப்பூசியோ அல்லது குறிப்பிட்ட சிகிச்சையோ இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!