Latestமலேசியா

ஷா ஆலம்: கட்டடத்திலிருந்து விழுந்து சிலாங்கூர் குற்றப் புலனாய்வுத் துறை மூத்த போலீஸ் அதிகாரி மரணம்

ஷா ஆலாம், மே-10-சிலாங்கூர் மாநில போலீஸ் தலைமையகத்தின் குற்றப் புலனாய்வுத் துறையான JSJ-வின் மூத்த அதிகாரி ஒருவர், ஷா ஆலாமில் ஒரு கட்டடத்திலிருந்து விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

இன்று அதிகாலை 3 மணிக்கு நிகழ்ந்த அச்சம்பவத்தில் உயிரிழந்த அதிகாரி, சிலாங்கூர் பிரிவில் உதவிப் பணிப்பாளராக (D7) கடமையாற்றி வந்த ஆடவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

போலீஸாருக்குக் கிடைத்த அவசர அழைப்பைத் தொடர்ந்து, சம்பவ இடம் விரைந்த மருத்துவக் குழுவினர் அந்த அதிகாரி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக உறுதிப்படுத்தினர்.

இறந்த அதிகாரியின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக ஷா ஆலம் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
அதனறிக்கைக் கிடைக்கும் வரை இது ஒரு திடீர் மரணமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!