Latestமலேசியா

UEC, Tahfiz மாணவர்கள் பல்கலைக்கழகங்களில் சேருவதற்கான விதிமுறைகளில் மாற்றமில்லை; தற்போதைய அரசாங்கக் கொள்கையே நீடிக்கும்

கோலாலாம்பூர், மே-22-UEC மற்றும் Tahfiz கல்விப் பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் பொதுப் பல்கலைக்கழகங்களில் இணைவதற்கான விதிமுறைகள், தற்போதைய அரசாங்கக் கொள்கை மற்றும் பல்கலைக்கழகத் தகுதி வரம்புகளுக்கு உட்பட்டே அமையும் என, MQA எனப்படும் மலேசியத் தகுதி நிறுவனம் தெளிவுபடுத்தியுள்ளது.

தேசியக் கல்வி முறைக்கு வெளியில் இருக்கும் மாணவர்கள், பொது உயர் கல்விக் கூடங்களில் குறிப்பிட்ட சில பாடப்பிரிவுகளில் தொடர்வதற்கு அரசாங்கம் அண்மையில் அனுமதி வழங்கியது.

இருப்பினும், இந்த விண்ணப்பங்கள் அனைத்தும் MQA நிர்ணயித்துள்ள தரநிலைகளுக்கும், அந்தந்த பல்கலைக்கழகங்களின் பிரத்யேக நிபந்தனைகளுக்கும் உட்பட்டே பரிசீலிக்கப்படும் என, அதன் தலைமை செயலதிகாரி டத்தோ Dr Mohammad Shatar Sabran தெரிவித்தார்.

குறிப்பாக, மலாய் மொழி போன்ற முக்கியப் பாடங்களில் SPM தேர்ச்சித் தேவைகள் இதில் கண்டிப்பாகக் கடைப்பிடிக்கப்படும் என்றார் அவர்.

பல்வேறு பின்னணியைக் கொண்ட மாணவர்களுக்குக் கல்வி வாய்ப்புகளை வழங்கும் அதே வேளையில், நாட்டின் கல்வித் தரத்தையும் அங்கீகாரத்தையும் நிலைநிறுத்துவதே இதன் நோக்கம் என அவர் மேலும் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!