
மலேசியாவில் இரண்டாம் வகை நீரிழிவு நோய் மேலாண்மை மற்றும் தடுப்பு ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், ‘Life Standards’ நிறுவனத்தின் அதிநவீன “Plasglucon” மூலிகை ஊட்டச்சத்து தயாரிப்பு அறிமுக விழா, KLCC-யில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
மருத்துவப் பேராசிரியர்கள், ஆய்வாளர்கள் மற்றும் சுகாதார நிபுணர்கள் என பலர் முன்னிலையில் இந்நிகழ்வு நடந்தேறியது.
உணவே மருந்து என்ற உயரிய தத்துவத்தை முன்வைத்த ‘Life Standards’ நிறுவனத்தின் நிறுவனர் ஜெயக்குமார் சுப்ரமணியம், வெறும் சுகாதாரப் பொருட்களை விற்பனை செய்வது மட்டும் தங்களின் நோக்கமல்ல என்றும், ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்குவதற்கான விழிப்புணர்வுக் கல்வியை வழங்குவதே நிறுவனத்தின் முதன்மைக் குறிக்கோள் என்றும் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
தொடர்ந்து வணக்கம் மலேசியாவுக்குப் பேட்டியளித்த சந்தைப்படுத்தல் ஆலோசகர் ரமேஷ் சுப்ரமணியம், இந்த “Plasglucon” தயாரிப்பானது பூண்டு, பச்சைத் தேயிலை, சுருள் பாசி (Spirulina) மற்றும் நெல்லிக்காய் போன்ற இயற்கை ஆன்டி-ஆக்ஸிடன்ட் (antioxidant) மூலிகைகளின் கலவையால் ஆனது என்றும், இது இரத்தச் சர்க்கரை அளவைச் சீராகப் பராமரித்து ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என்றும் விளக்கமளித்தார்.
மலேசியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இரண்டாம் வகை நீரிழிவு நோய் மற்றும் அது தொடர்பான உடல்நலப் பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துவதே இந்த நிகழ்வின் முதன்மை நோக்கமாகும்.
நோய்கள் வந்தபின் குணப்படுத்துவதை விட, வரும்முன் காப்பதே சிறந்தது என்றார் அவர்.
அதே சமயம், இந்த “Plasglucon” தயாரிப்பானது, உடலில் உள்ள வளர்சிதை மாற்றப் பாதைகளை (Metabolic Pathways) சீரமைப்பதன் மூலம், உடலின் ஒட்டுமொத்த ஆற்றலையும் சுறுசுறுப்பையும் (Overall Vitality) மீட்டெடுக்கப் பயன்படுகிறது.
இது அன்றாட ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு ஒரு சிறந்த துணையாக விளங்கும் எனவும் அவர் சொன்னார்.
இத்தயாரிப்பில் சேர்க்கப்பட்டுள்ள மிக முக்கியமான 4 தூய்மையான இயற்கை மூலிகைகள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் குறித்தும் ரமேஷ் தெளிவாக விளக்கினார்.
சிறப்பு விருந்தினர்களுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டதை அடுத்து, மலேசியாவின் சுகாதாரத் துறையில் ஒரு புதிய மைல்கல்லாக அமைந்த இந்த அறிமுக விழா இனிதே நிறைவுற்றது.



