
பாரம்பரிய இந்திய உணவுகளை நவீன மற்றும் உலகளாவிய ஃபியூஷன் (fusion) முறையில் வழங்கும் நோக்கில், பத்து கேவ்ஸ் விஸ்மா கெரிங்காட்டில் அமைந்துள்ள ‘சோழாஸ்’ (Cholas) உணவகம், இன்று தனது 5 புதிய புதுமையான உணவு வகைகளை அறிமுகப்படுத்தியது.
மலேசிய இந்திய விளையாட்டுப் பேரவையின் தலைவர் டத்தோ டி. மோகன் இப்புதிய மெனுவை அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார்.
Royal Kataifi Prawn, Crispy Golden Crunch , Calamari Rings , Egg Nest Parotta, 3 சுவைகளில் வரும் Thau Bytes ஆகியவையே அந்த 5 புதிய உணவுகளாகும்.
இவையனைத்தும், MSG சேர்க்கப்படாத ஆரோக்கியமான ‘clean eating’ முறையில், சோழாஸ் குழுவினரால் பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்டுள்ளன.
சோழர் பாரம்பரியத்தின் பின்னணியில், இந்திய உணவுகளை உலகத் தரத்திற்கு நகர்த்துவதே தங்களின் நோக்கம் என சோழாஸ் உணவகத்தின் நிறுவனர் Dr மதிவதனி தெரிவித்தார்.
7 மாத வெற்றிகரமான வணிகப் பயணத்திற்குப் பிறகு இந்த பிரம்மாண்ட உணவுப் புத்தாக்கம் செய்யப்பட்டுள்ளது குறித்தும் இவர் பேசினார்.
இந்த புதுமைக்கான உத்வேகம் சோழர் பாரம்பரியம் மற்றும் குடும்ப வழித்தோன்றலின் பின்னணியிலிருந்து கிடைத்தது என்று நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார்.
இவ்வேளையில், புதிய மெனுவை அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தது குறித்து டத்தோ T மோகன் தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார்.
இந்திய உணவுகளில் புகுத்தப்பட்டுள்ள இந்த நவீன புதுமையையும், அதன் உலகளாவிய தரத்தையும் அவர் வெகுவாகப் பாராட்டினார்.
தற்போதைய போட்டி நிறைந்த சந்தையில் உணவகங்கள் தங்களை எப்படி புதிய சிந்தனைகளோடு மாற்றி வடிவமைத்துக் கொள்ள வேண்டும் என்பதன் முக்கியத்துவத்தையும் T மோகன் வலியுறுத்தினார்.
இவ்வேளையில், இந்நிகழ்வில் கலந்துக் கொண்ட சில வணிக பிரமுகர்கள் சோழாஸ் உணவகத்தின் பிரத்யேக உணவுகள் மற்றும் அதன் சிறப்பம்சங்கள் குறித்து பேசியதோடு, இந்த நவீன உணவகத்திற்கான தங்களது ஆதரவையும் தெரிவித்தனர்.
சோழர் பாரம்பரியத்தின் சுவையையும், நவீன உணவு கலாச்சாரத்தின் புதுமையையும் ஒருங்கிணைத்து, இந்திய உணவுகளை புதிய உயரத்திற்கு கொண்டு செல்லும் முயற்சியாக சோழாஸ் உணவகத்தின் இந்த பிரம்மாண்ட உணவுப் புத்தாக்கம் அமைந்துள்ளது.
பாரம்பரிய சுவையில் புதுமையை புகுத்தி, ஆரோக்கியமான மற்றும் தரமான உணவுகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் சோழாஸ் உணவகத்தின் இந்த முயற்சி, மலேசிய இந்திய உணவகத் துறையில் புதிய மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.



