
கோலாலாம்பூர், அக்டோபர்-3,உலகப் புகழ்பெற்ற ஆன்மிக குருவும் யோகியுமான சத்குரு ஜக்கி வாசுதேவ் பங்கேற்கும் சிறப்புத் தமிழ் மஹாசத்சங்கம், வரும் அக்டோபர் 8-ஆம் தேதி சிலாங்கூர் பத்து மலை திருத்தலத்தில் நடைபெறவுள்ளது.
இந்தியாவுக்கு வெளியே சத்குருவின் நேரடித் தமிழ் மஹாசத்சங்கம் ஒன்று ஏற்பாடு செய்யப்படுவது இதுவே முதல்முறையாகும்.
அன்று இரவு 7 மணி முதல் 9 மணி வரை நடைபெறும் இந்நிகழ்ச்சியில், அனைவரும் கலந்துகொள்ளும் வகையில் அனுமதி முற்றிலும் இலவசமாக்கப்பட்டுள்ளது.
பொது மக்கள் sadhguru.co/tamil-satsang என்ற இணையத்தளம் வழியாக முன்முதிவுச் செய்துக் கொள்ளலாம்.
மலேசிய பயணத்தின் ஒரு பகுதியாக, ஏற்கனவே ‘இன்னர் இன்ஜினியரிங்’ பயிற்சி பெற்றவர்களுக்காக சத்குருவின் சிறப்பு யோகப் பயிற்சி பட்டறையும் நடைபெறவுள்ளது.
ஆசிய பசிஃபிக் வட்டாரத்தைச் சேர்ந்த தமிழ் சமூகத்தினர் சத்குருவை நேரில் சந்தித்து வாழ்வியல் மற்றும் யோக அறிவியலை ஆழமாக அறியும் அரிய வாய்ப்பாக இந்த மஹாசத்சங்கம் அமையவுள்ளது.



