Latest

KTMB வரலாறு: நீண்ட தொடர் விடுமுறைக்கு மிக அதிகமாக 347,000 இரயில் டிக்கெட்டுகள் விற்பனைக்கு

கோலாலம்பூர், மே-24,

வரவிருக்கும் நீண்ட தொடர் விடுமுறையை முன்னிட்டு, KTMB நிறுவனம் தனது வரலாற்றிலேயே மிக அதிகமாக 347,000 டிக்கெட்டுகளை விற்பனைக்கு வெளியிட்டுள்ளது.

ஹரி ராயா ஹஜி, விசாக தினம் மற்றும் மாட்சிமை தங்கிய பேரரசரின் அதிகாரப்பூர்வ பிறந்தநாள் ஆகிய 3 முக்கிய பொது விடுமுறைகள் அடுத்தடுத்து வருவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதுவரை கிட்டத்தட்ட 80 விழுக்காடு அல்லது 270,000 டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துவிட்டதாக KTMB குழும தலைமை நிர்வாக அதிகாரி டத்தோ Azlan Shah Al Bakri தெரிவித்தார்.

குறிப்பாக, கிழக்குக் கரைக்கான இரயில் சேவைகள் முற்றிலும் விற்றுத் தீர்ந்துவிட்டன.

அதே வேளை, தென் மற்றும் வட வழித்தடங்களுக்கான டிக்கெட் விற்பனை முறையே 88 மற்றும் 82 விழுக்காட்டை எட்டியுள்ளன.

இன்னும் அறுபதாயிரத்திற்கும் மேற்பட்ட டிக்கெட்டுகள் மட்டுமே மீதமுள்ளன.

இவ்வேளையில், பொது மக்களின் பயணச் சுமையைக் குறைக்க Madani30 மற்றும் ‘Ekspres Lambaian Aidiladha’ (ELA) திட்டங்களின் கீழ் 30 விழுக்காடு கட்டணத் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

இந்த விடுமுறை காலத்தில் பயணிகள் பாதுகாப்பாகவும் வசதியாகவும் பயணிக்க அனைத்து தொழில்நுட்ப மற்றும் செயல்பாட்டுத் தயாரிப்புகளும் முழுமையாகச் தயார்நிலையில் உள்ளதாகவும் Azlan உறுதியளித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!